கொளத்தூர் : பள்ளிகளில் நாய் தொல்லையால் மாணவர்கள் அச்சம்

கொளத்தூர் : பள்ளிகளில் நாய் தொல்லையால் மாணவர்கள் அச்சம்
X

 கொளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் கலையரங்க மேடையில் நாய்கள் அதிக அளவில் காணப்படும் காட்சி.

கொளத்தூர் ஊராட்சி துவக்க பள்ளியில் உணவு இடைவேளையின் போது உணவிற்காக வரும் நாய்கள் மாணவர்களை அச்சுறுத்துகின்றன

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து அமைந்துள்ளது கொளத்தூர் ஊராட்சி. இங்குள்ள அரசு ஆரம்ப நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி முழுவதும் சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான மதிய உணவு கலையரங்க மேடையில் வழங்கப்படுகிறது. அவ்வேளையில் அருகில் உள்ள பகுதியில் உள்ள நாய்கள் அனைத்தும் பள்ளியில் உள்ள சுவர் , கேட் ஓட்டை வழியாக பள்ளி மாணவர்கள் உணவருந்தும் இடம் அருகே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் உணவு உண்கின்றனர். அருகிலுள்ள சத்துணவு ஊழியரோ அதை விரட்ட கூட முயற்சிக்கவில்லை.

தனக்கு உணவு அளிக்கவில்லை என்ற கோபத்திலோ அல்லது மாணவர்கள் அதனை தாக்க முயற்சிக்கும் போது ஏற்படும் விளைவுகளைத்தடுக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோருகின்றனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!