காஞ்சிபுரம் அருகே செல்லம்மா -பாரதி ரதத்திற்கு மாணவ, மாணவியர் வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே செல்லம்மா -பாரதி  ரதத்திற்கு மாணவ, மாணவியர் வரவேற்பு
X

காஞ்சிபுரம் அருகே செல்லம்மா, பாரதி ரதத்திற்கு மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

காஞ்சிபுரம் அருகே செல்லம்மா -பாரதி ரதத்திற்கு மாணவ, மாணவியர்கள் வரவேற்பு அளித்தனர்.

சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் பாரதி - செல்லம்மா திரு உருவ சிலை தென்காசி மாவட்டம் கடையத்தில் ஜூன் 27 ஆம் தேதி நிறுவப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பாக்கத்தில் இருந்து பாரதி செல்லம்மா திருஉருவ சிலை அடங்கிய ரதயாத்திரை துவங்கியது

அதன்படி நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் செல்லம்மா பாரதி ரதமானது வந்தடைந்ததுஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட ஊர்மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மலர்தூவி வரவேற்றனர்.

பிறகு ஊராட்சி நடுநிலை பள்ளிக்கு வந்தடைந்த ரதத்தை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர். மேலும் பள்ளி மாணவ மாணவியர் சார்பில் சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் சந்தவேலூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் , ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட் , துணை தலைவர் மகாலட்சுமி ஜெயக்குமார் கலந்து கொண்டனர்


Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!