ஸ்ரீபெரும்புதூர் : அண்ணா சிலையினை புதிய சேர்மேன் சீரமைப்பாரா ?

ஸ்ரீபெரும்புதூர் : அண்ணா சிலையினை புதிய சேர்மேன் சீரமைப்பாரா ?
X

 சேதமடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த ஒன்றியக்குழு தலைவர்‌ கருணாநிதி .

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில் சேதமநை்திருக்கும் அண்ணாசிலையை, புதிய சேர்மேன் சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காந்தி மற்றும் அண்ணா சிலைகள் அமைந்துள்ளது. இதில் அண்ணா சிலை சிதிலமடைந்து காணப்படுகிறது என தொடர் செய்திகள் வெளியானதை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக துணி கொண்டு மூடப்பட்டிருந்தது.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்று திமுக கட்சியினர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வெற்றி பெற்றபின் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தனது ஆதரவாளர்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிதலமடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது அண்ணாவை வணங்கிய போது அங்கிருந்து தொண்டர்கள் விரைவில் அண்ணா சிலையை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ai future project