ஸ்ரீபெரும்புதூர்: ஆக்ஸிஜன் தொழிற்சாலையில் தமிழக முதல்வர் ஆய்வு!
காஞ்சிபுரம் ஆக்சிஜன் தொழிற்சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த காட்சி.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்களை நோய்தொற்றுலிருந்து பாதுகாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நோய் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் இயங்கும் ஆட்சியின் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐநாக்ஸ் தொழிற்சாலை யிலிருந்து வாகனங்கள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆட்சியின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இத்தொழிற்சாலையினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு தயாரிப்பு பணி மற்றும் விநியோகம் குறித்து தொழிற்சாலை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார் சராசரி உற்பத்தியை விட கூடுதல் உற்பத்தி செய்வதாக நிர்வாகம் கூறியதற்கு பாராட்டுகளை தெரிவித்து தொடர்ந்து இதுபோல் பொது மக்கள் பயனடையும் வகையில் செயல்படும் அறிவுறுத்தினார்.
முன்னதாக ஒரகடம் தனியார் கனரக தொழிற்சாலையில் பணிபுரியும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை துவக்கி .வைத்து தொழிலாளர் நலன் காக்க அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு தொழிலாளர்களிடையே வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஊரகத் தொழில் துறை அமைச்சர் தாமோதரன் , நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு , மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu