/* */

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி திடீர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி திடீர் ஆய்வு
X

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் கீழ் உத்திரமேரூர் வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் துணை மருத்துவ மனைகளும் இயங்கி வருகிறது.

கடந்த வாரங்களில் தடுப்பூசி செலுத்துவது முறைகேடு நடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை மீது புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஷ் அவரே முன்னின்று தடுப்பூக்கான டோக்கன்களை வழங்கி வந்தார்.

இந்நிலையில் இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களின் வருகை, நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் வசதிகள் மற்றும் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பதிவேடுகளை முறையாக பயன்படுத்தாத அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். மருத்துவத்தை தேடி வரும் பொதுமக்களுக்கு அனைத்து வித மருத்துவ வசதிகளையும் உரிய காலத்தில் அளித்து அவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 28 July 2021 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!