கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்
X

ஹூண்டாய் கார் கம்பெனி தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை 29ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹூண்டாய் கார் கார் நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் , அக்கறையும், பொறுப்பும் மிக்க ஒரு நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிலவும் கொரோனா 2ம் அலை காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தனது பணியாளர்களுக்கு உதவ பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய கடினமான சூழலில் அவர்கள் அனைவரது ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதிசெய்ய முனைப்புடன், பல முற்போக்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தற்போது நிலவும் பெருந்தொற்று சூழலில் காரணமாக தொழிற்சாலை இயக்கத்தை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது நாளை 25 மே 2021 முதல் 29 மே 2021 வரை நிறுத்திவைக்க ஹூண்டாய் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் பின்னர் தொழிற்சாலை இயக்கம் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!