ஸ்ரீபெரும்புதூர்: மதுக்கடையில் கொள்ளை முயற்சி-சிசிடிவி உதவியால் 3பேர் கைது!
டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பேரையும், துளையிடப்பட்ட சுவரையும் காணலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வள்ளாரை பகுதியில் அரசு டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம ஆசாமிகள் 3 போ் மதுபான கடையின் பின்பக்க சுவரை டிரிலிங் மிஷின், கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி துளையிட்டு உள்ளே சென்று மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனா்.
இதே கடையில் ஏற்கனவே கொள்ளை நடந்துள்ளதால் கடையின் கண்காணிப்பாளர், சிசிடிவி கேமராக்களை பொறுத்தி, தனது செல்போனுக்கு சென்சாா் இணைப்பும் செய்திருந்தாா்.
கொள்ளையா்கள் சுவரில் துளையிட்டபோது, ஏற்பட்ட அதிா்வு காரணமாக, டாஸ்மாக் கண்காணிப்பாளர் புருஷோத்தமன், செல்போனில் சிக்னல் அலாரம் ஒலித்தது.உடனே அவா் வீட்டிலிருந்தபடியே ஶ்ரீபெரும்புத்தூா் போலீசுக்கு தகவல் கொடுத்தாா்.
போலீஸ் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். இதனை அறிந்த கொள்ளையா்கள், பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினா். இதையடுத்து பைக்கை கைப்பற்றிய போலீசாா் வாகன பதிவு எண் கொண்டு விசாரணை நடத்தினா்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் (31) என்பவரின் பைக் என்று தெரியவந்தது. அவரை முதலில் பிடித்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது நண்பா்களான மகேந்திர குமார் (35), மகேந்திரன் (30) ஆகிய மூவரும் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் மூவருமே கட்டிடத் தொழிலாளா்கள் என்பதும், குடிப்பழக்கம் உடையவா்கள் என்பதால், மது வேண்டம் என்கிற எண்ணத்தில் டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருட முடிவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu