ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா  கொடியேற்றம்
X
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோவில் கொடியேற்றம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றம் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக காட்சியளித்து வருகிறார். ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில், வருடம் தோறும் சித்திரை மாதம் பிரமோற்சவ விழாவும் ராமாநுஜர் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், பத்து நாட்கள் நடைபெறும் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்துநாட்கள் நடைபெறும் இந்த பிரமோற்சவ விழாவில் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து உற்சவர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பிரமோற்சவத்தின் 7ம் நாளான வரும் 22ம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.

இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதையடுத்து ராமானுஜரின் அவதார திருவிழா வரும் 26ம் தேதி தொடங்குகிறது. பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த அவதார திருவிழாவில் உற்சவர் ராமாநுஜர் பல்வேறு வாகனங்களில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவதார திருவிழாவின் 9ம் நாளான மே மாதம் 4ம் தேதி திருத்தேர் திருவிழாவும், 11ம் தேதி கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழா மற்றும் ராமாநுஜரின் அவதார திருவழாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகமும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றனர்.


Tags

Next Story