ஸ்ரீபெரும்புதூர் : சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

ஸ்ரீபெரும்புதூர் : சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி
X

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான சிறுமி

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருளர் குடியிருப்பு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி இறந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய ஒரத்தூர் கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதியில் மாரி. இவரது மனைவிஜெயா மற்றும் குழந்தை லதாவுடன் வசித்து வருகின்றனர்..

இந்நிலையில் இன்று மாலை 3மணியளவில் இவர்களுடைய வீட்டின் நடுவில் உள்ள சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் வீட்டின் உள்ளே இருந்த எட்டு வயது குழந்தை லதா இடிபாடுகள் மத்தியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் ஒரத்தூர் கிராமம் இருளர் குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!