ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!
கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பிடிபட்டவர்களையும், பிடித்த போலீசாரையும் காணலாம்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது தம்பி கலாநிதியுடன் இணைந்து வீட்டின் பின்புறம் உள்ள மறைவு பகுதியில் சாராயம் காய்ச்சி தருவதாக ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்தை சோதனையிட்டதில் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 70 லிட்டர் சாராய உரலும் , 30 லிட்டர் எரி சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தயாநிதி கையும் களவுமாக பிடிபட்டார். கலாநிதி காவல்துறை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.
இதேபோல் கருமாங்கரை கிராம ஏரிக்கரையில் அதே பகுதியை சேர்ந்த முரளி , வினோத் , எல்லப்பன் ஆகிய மூவர் சாராயம் காய்ச்சுவதுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு மாறுவேடத்தில் சென்ற சோமங்கலம் காவல்துறையினர் சாராயம் காய்ச்சில் ஈடுபட்டிருந்த மூவரை கையும் களவுமாக பிடிக்க முயன்றபோது முரளி என்பவர் தப்பி ஓடி விட்டார்.
வினோத் மற்றும் எல்லப்பன் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்து அங்கு காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்தில் இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சுவது பிடிபட்டதும் இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டும் , இருவர் தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று இதே பகுதியை சேர்ந்த ஒருவர் தின்னர் கெமிக்கல் எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து உயிர் இழந்ததும் அதை உடன் குடித்த இருவர் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் மற்றொருவர் தப்பி ஓடியதும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட காவல்துறை வேட்டையில் இந்த இரு சம்பவங்களும் சிக்கியது என தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu