ஸ்ரீபெரும்புதூர் : 10.25டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது
பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர்கள்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக வந்த புகாரின் அடிப்படையில் ADGP ஆபாஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் எஸ்.பி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை பிரிவிற்கு வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் டிஎஸ்பி ஜான் சுந்தர் மற்றும் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு நோக்கி சென்ற மினி லாரியை மடக்கி சோதனை மேற்கொண்ட போது அதில் ரேஷன் அரிசி கடத்திய செல்வது தெரியவந்தது
லாரி மற்றும் ஓட்டுநர் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை செய்தபோது 50 கிலோ எடைகொண்ட 205 மூட்டைகள் சுமார் 10.25 டன் எடையுள்ள அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ராமாபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முத்துச்செல்வம் , உதவியாளர் போளூரை சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதற்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை வாகன சோதனையில் பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu