காதல் தோல்வியால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

காதல் தோல்வியால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட விஷால்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் தன்னுடன் படித்த சக மாணவி பேசுவதை நிறுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். கணவன், மனைவி இருவரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவரது மகன் விஷால் என்பவர் அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது உடன் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். இது மெல்ல மெல்ல காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த மாணவியின் தாய் மாணவியை கண்டித்து விஷாலுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார்.

தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் காதலி பேச மறுத்ததால் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் விஷால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஷால் உயிரிழந்த இழந்த நிலையில் மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சோமமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சிறுவயது காதல் தோல்வியில் மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!