ஈஸ்டர் சிறப்பு திருப்பலி: ஏராளாமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ஈஸ்டர் சிறப்பு திருப்பலி:  ஏராளாமான கிறிஸ்தவர்கள்  பங்கேற்பு
X

 ஸ்ரீபெரும்புதூர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நடந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் விழா 

ஸ்ரீபெரும்புதூர் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுந்த விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வளாகத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் விழா நடைபெற்றது. அன்னை வேளாங்கண்ணி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இயேசு மரித்ததை நினைவு படுத்தும் படி ஒரு பக்கம் சிலுவையும், மறுபக்கம் இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் படி இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். இரவு 12 மணி அளவில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் சிறப்பு ஆராதனை நடைபெற்ற நிலையில் கிறிஸ்தவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியோடு இயேசுவை ஆராதித்தனர்.


Tags

Next Story
ai in future agriculture