தொழிற்சாலை ஊழியர்களுக்கு பாதுகாப்பான சாலை பயணம் குறித்து எஸ்பி., விழிப்புணர்வு
ஒரகடம் தனியார் கார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய காஞ்சி மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகர்.
Road Safety Awareness -காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் அதிகளவு தொழிற்சாலையில் இயங்கி வருகிறது இதில் பணி புரியும் ஊழியர்கள் இரவு நேரங்களில் பணி முடித்து அதிகாலை வீடு திரும்பும் நிலையில் பல்வேறு விபத்துகளை சந்திக்கின்றனர்.
இதனை தவிர்க்கும் பொருட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சி மாவட்ட காவல்துறையால் திட்டமிடப்பட்டது.
அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரகடம் நிசான் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பின் அவசியம் குறித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது செல்போன் உபயோகிக்க கூடாது, இப்பகுதியில் அதிகளவில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது.
எனவே, மேற்படி, வாகனங்களில் பயணம் செய்யும்போது சீட்பெல்ட் அணிய வேண்டியதின் அவசியம் குறித்தும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஒருபகுதியாக பேருந்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிசான் கம்பெனி ஊழியர்களால் நேரடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிசான் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் கீர்த்தி பிரசாத், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சுனில் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu