கரசங்கால் 10,008 விளக்கேற்றி மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

சிவராத்திரியை முன்னிட்டு, கரசங்கால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோயிலில் 10,008, விளக்குகள் ஏற்றப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயத்தில் 10,008 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது. முதல் கால பூஜையில் 108 குடம் பாலபிஷேகம் செய்து சிவனடியார்கள் மூலம் தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜையில் விசேஷ பஞ்சாமிர்த அபிஷேகமும் எம்பெருமானுக்கு செய்யப்பட்டது. மூன்றாம் கால பூஜையில் 108 இளநீர் அபிஷேகமும், நான்காம் கால பூஜையில் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தகோடிகள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu