ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பணம் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பணம் பறிமுதல்
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 2.72லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சிறப்பு தாசில்தார் மலர்விழி தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் செட்டிபேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் இருந்து எந்தவித ஆவணமும் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 692 மற்றும் வெளிநாட்டு பணம் சுமார் 2 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) கைப்பற்றப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அதிகாரி முத்து மாதவனிடம் ஒப்படைத்தனர். அதன்பின் உரிய வழிமுறைகளை பின்பற்றி பிடிபட்ட பணம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!