1389 வாக்குசாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள்

1389 வாக்குசாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள்
X

தேர்தல் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 5 இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் S.S.K.V பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், குன்றத்தூர் நகராட்சியில் நகராட்சி சமுதாயக் கூடத்திலும், மாங்காடு நகராட்சிக்கு சிவசக்தி கல்யாண மண்டபதிலும், வாலாஜாபாத் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர் நிலை பள்ளியிலும், உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர் நிலை பள்ளியிலும், திருப்பெரும்புதூர் பேரூராட்சியில் வன்னியர் சத்திரம், என்ற இடத்திலும் நடைபெற்றது.

இதில் 1389 வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்துகொண்டு வாக்களிக்கும் விதம், வாக்குபதிவு இயந்திரம் கையாளும் பயிற்சி ஆகியவைகள் வழங்கபட்டது. மேலும் ஓரு கட்ட பயிற்சி ஓரிரு‌ தினங்களில் உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!