ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுப் பொருள் ஒப்பந்தம் கேட்டு, கம்பெனி நிர்வாகியை அடித்து, உதைத்து, மிரட்டியவர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுப் பொருள் ஒப்பந்தம் கேட்டு, கம்பெனி நிர்வாகியை அடித்து, உதைத்து, மிரட்டியவர் கைது
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை கழிவுகளை கேட்டு மிரட்டிய விவகாரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராமு.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையின் கழிவு பொருட்கள் ஒப்பந்தம் கேட்டு நிர்வாகியை அடித்து மிரட்டிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா , மேவலுர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுராஜ். இவர் தனியார் தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் செங்காடு பகுதியைச் சேர்ந்த ராமு, அரக்கோணத்தை சேர்ந்த நரேஷ் , திருவள்ளூரை சேர்ந்த பிரகாஷ், இருளச்சேரி பகுதியைச் சேர்ந்த குமார் ஆகிய நான்குபேர் நிறுவனத்தின் கழிவுப்பொருட்களை தங்களுக்கு அளிக்க வேண்டும் என தன்னை அடித்து மிரட்டியதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சிராஜ் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் விசாரணை மேற்கொண்டதில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ராமு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமு ஏற்கனவே கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ராணிப்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நரேஷ், பிரகாஷ் , குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா