ரூ 200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு..

Thiruperumbudur
Thiruperumbudur-காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் (குயின்ஸ் லேண்ட்) பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள பகுதியில் அதன் நிறுவனத்தால் பல ஆண்டுகளாக நீர்நிலை மற்றும் அனாதீனம் வகைப்பாட்டு புறம்போக்கு அரசு நிலம் சுமார் 32 ஏக்கர். 41 சென்ட் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளனர்
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் நில நிர்வாக ஆணையம் உத்தரவின்பேரில் இன்று 200 கோடி மதிப்புடைய அரசுக்கு சொந்தமான நிலத்தை திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் , வட்டாச்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட வருவாய்துறையினர் ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் இன்று வருவாய் துறையின் கட்டுப்பாட்டிற்குள் 200கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டு கையகப்படுத்தினர். இந்த நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை , வருவாய்த் துறை மற்றும் பொழுதுபோக்கு நிர்வாகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu