டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரண உதவி : முதல்வர் அறிவிப்பு

கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஒரகடம் பகுதியில் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக மாற்று திறனாளியான துளசிதாஸ் பணிபுரிந்து வருகிறார். இவரது உதவியாளராக ராமு என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 4ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பணி முடித்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் துளசிதாசை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் இருந்த ராமு என்பவர் பலத்த காயங்களுடன் அவரது உடலிலிருந்து துப்பாக்கி குண்டுகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் பணி பாதுகாப்பு கேட்டும், போதிய இழப்பீடு அவரது குடும்பத்திற்கும் அளிக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல் அந்தந்த டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் , அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாலை திடீரென தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் இறநத டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாசர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டது. இனிவரும் காலங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் அளிக்கும் புகாரில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் எனவும் தொழிற் சங்கங்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu