/* */

செல்போன், பணம் பறித்து சென்றவர்கள் 5 மணி நேரத்தில் பிடிபட்டனர்

ஒரகடம் அருகே வாலிபரை தாக்கி வீட்டில் இருந்த பணம் மற்றும் செல்போன்கள் பறித்த 3 வாலிபர்கள், 5 மணி நேரத்தில் பிடிபட்டனர்

HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் , பண்ருட்டி தாலுக்கா, சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரும் இவரது நண்பர் சுரேஷும் ஓரகடம் அடுத்த காரணிதாங்கல் கிராமத்தில் தங்கி, வேன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் பிரகாஷ், தனது வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அந்த வழியாக வந்த 3 மர்ம நபர்கள் அவரை தாக்கி, வீட்டினுள் சென்று அவரது நண்பர் சுரேஷையும் கத்தியால் தாக்கி, அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து பிரகாஷ் உடனடியாக ஓரகடம் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில், அனைத்து பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதி வழியாக வந்த மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் காவல்துறை விசாரித்ததில், அவர்கள் பிரகாஷ் மற்றும் சுரேஷை தாக்கியது என்பது தெரியவந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில், இவர்கள் ஒரகடம் அடுத்த நாவலூர் பகுதியை சேர்ந்த செல்வம், டில்லிபாபு, நந்தகோபால் என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 கத்தி, இரண்டு செல்போன் மற்றும் 1000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓரகடம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஓரகடம் காவல் துறையினர், வழிப்பறி செய்த 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 30 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  8. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  9. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  10. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...