ஓரகடம் அருகே சாலை விபத்து: 7வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

ஓரகடம் அருகே  சாலை விபத்து: 7வயது குழந்தை உட்பட 3 பேர் பலி
X

விபத்து குறித்த சிசிடிவி புகைப்படம்.

வஞ்சுவாஞ்சேரி பகுதியில் அதிவேகமாக வந்த சிமெண்ட் கலவை இயந்திர லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று இரு கார் மீது மோதியது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஓரகடம் அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை இயந்திரம் லாரி அதிவேகம் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது. இந்நிலையில் லாரி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரு கார்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

உடனடியாக பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் விபத்தில் சிக்கிய இரு கார்களை மீட்ட போது , ஷிப்ட் கார் ஓட்டுநர் கமல் குமார் (43) மற்றும் தேவேஷ்குமார் (35) ஆகிய இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். மற்றொரு இடியோஸ் காரில் பயணம் செய்த அம்சிகா பிரபஞ்சினி என்ற 7 மாத குழந்தை இறந்தது. மேலும் மற்றொரு கார் ஓட்டுநர் விஜயகுமார் அதில் பயணம் செய்த நந்தினி, அனிதா பாரதி, மேகனா, மித்திரன், எஸ்வந்த், சஞ்சய் அனைவருக்கும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இது குறித்து மணிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரி‌ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என காட்சிகள் மூலம் தெரிய வருகிறது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்