பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் நெல் பயிர் அறுவடை பரிசோதனை
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இச்சிவாக்கம் கிராமத்தில் நெல் பயிர் அறுவடை பரிசோதனை பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் மருத்துவர் பிங்கி ஜோவால் தலைமையில் நடைபெற்றது
ஆண்டுதோறும் சில முக்கிய உணவு மற்றும் உணவு இல்லாத பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் எதை எண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் அறுவடை களத்தில் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் பையில் மகசூல் விவரங்கள் துல்லியமாக கணக்கீடு செய்யப்படுகிறது.இவ்வாறு பெறப்படும் பயிர் உற்பத்தி அளவீடுகள் மாநில அளவில் தொகுக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் .இந்நிகழ்வினை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை மூலம் தயார் செய்யப்படும் பருவ கால பயிர் அறிக்கை விவரங்கள் மத்திய அரசின் உணவுக் கொள்கை வகுப்பதற்கும் , வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை வகுப்பதற்கும் பயன்படுகிறது.
இந்நிலையில் இந்த பரிசோதனை நிகழ்வு ஸ்ரீபெரும்புதூர் வட்டம், திருச்சிவாக்கத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் மருத்துவர் பிங்கி ஜோவல் முன்னிலையில் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் உரையாடிய ஆணையர் காரி பருவத்திற்கு நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி கொள்முதல் நிலையங்களை ஆகஸ்ட் மாதத்திலேயே அமைத்து தர ஆவண செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆணையர்,அடங்கல் தரவுகளின் தற்போதைய நிலையினை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டறிந்தார்.11ஆவது வேளாண்மை கணக்கெடுப்பிற்கு, அடங்கல் தான் அடிப்படை என்றும், இக்கணக்கெடுப்பு முதன்முறையாக இணையதள செயலி அல்லது கைபேசி செயலின் மூலம் செயல்படுத்த உள்ளதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இ அடங்கல் தரவுகளை உடன் மேற்கொள்ளுமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டல புள்ளியல் இணைய இயக்குனர் ஜெயகாந்தி மாவட்ட புள்ளியல் துணை இயக்குனர் கு சுந்தர்ராஜ், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஆதி சாமி, கோட்ட புள்ளியல் உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் புள்ளியல் , வேளாண்மைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu