மாற்று இடம் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் குடியிருப்புவாசிகள் மனு

மாற்று இடம் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் குடியிருப்புவாசிகள் மனு
X

 மாற்று இடம் கூறி மனு அளிக்க வந்த கொளத்தூர் ஊராட்சி சாலையோர குடியிருப்பு வாசிகள்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொளத்தூர் மற்றும் நாவலூர் பகுதிகளில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அமைந்துள்ளது கொளத்தூர் ஊராட்சி. ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் நெடுஞ்சாலை சாலை விரிவுக்காக சாலையின் இரு புறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட திட்டமிடப்பட்டது. இதற்காக கொளத்தூர் ஊராட்சி மற்றும் நெல்வாய் பகுதிகளில் இருபுறமும் வீடுகள் கடைகள் என அமைந்துள்ள உரிமையாளர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டது.

இந்நிலையில் திடீரென இன்று காலை ஜேசிபி இயந்திரத்துடன் நெடுஞ்சாலை துறையினர் வீடுகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்தி சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டனர்.

அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பணிக்காக காலை சென்று விட்டு நிலையில், இதை கேட்டு மீண்டும் பணியில் இருந்து வந்து பொருட்களை எடுத்து வெளியில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வேந்திரனிடம் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தாங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த முறை அறிவிப்பு என சொல்லிவிட்டு காலம் தாழ்த்தி விட்டு, தற்போது எந்தவித முன்னறிவிப்பயம் இன்றி வீடுகளை இடித்ததால் எங்கள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது என்று கூறினர்

எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க அரசுக்கு சிபாரிசு செய்து தங்களது நிலையை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!