ஸ்ரீபெரும்புதூர் : நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற லாரி இரண்டாக உடைந்து விபத்து

ஸ்ரீபெரும்புதூர் : நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற லாரி இரண்டாக உடைந்து  விபத்து
X
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடி அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியதில் லாரி இரண்டாக உடைந்து கவிழ்ந்து விபத்து.

முதலமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடிக்கு அரை கிலோமீட்டர் முன்பாக டீசல் குறைந்துள்ளது.

இதனால் ஈச்சர் லாரியின் ஸ்டேரிங் லாக் ஆகி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவற்றில் மோதியது. இதில் லாரியின் பின் பகுதி உடைந்து ஆறு டயர்கள் மற்றும் டீசல் டேங்க் துண்டிக்கப்பட்டு ஈச்சர் லாரி தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் வேலூரை சேர்ந்த ஓட்டுனர் இன்பராஜ் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனங்கள் குறைந்த அளவே சாலையில் பயணித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!