ஸ்ரீபெரும்புதூர் பள்ளி அருகே சிதறிக்கிடக்கும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்

ஸ்ரீபெரும்புதூர் பள்ளி அருகே சிதறிக்கிடக்கும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்
X

 சிதறி கிடக்கும் தடைசெய்யப்பட்ட பான் பொருட்கள் .

ஸ்ரீபெரும்புதூர் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது பழைய நீதிமன்ற வளாகம். இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இதனை ஒட்டியே துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழ்நிலையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ் மற்றும் பான்மசாலா பாக்கெட்டுகள் வளாகத்தில் சிதறிக்கிடந்துள்ளது. அப்பகுதி வழியாக பலர் செல்வதை பார்க்க அங்கிருந்த நபர் அவ்வளாகத்தில் சென்று பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடப்பதும் அதை எடுக்க அங்கு சென்று வருவதும் தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட பொருட்களை பள்ளி மாணவர்களுக்கும்‌, வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனைக்காக எடுத்து வரப்பட்டதா அல்லது காலாவதியானதா என அதை பரிசோதித்து இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!