மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 17வயது சிறுவன் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 17வயது சிறுவன் கைது
X

பைல் படம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இவரது 23 வயது மகள் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்.

நேற்றைய தினம் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனான பிரேம் குமார் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயிடம் இடம் கூறியதை அடுத்து சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் பிரேம் குமாரை கைது செய்த மகளிர் போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்பு பிரேம்குமார் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!