கிருஷ்ணா கால்வாயில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும்
காஞ்சிபுரம் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க தடை விக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , சவிதா கல்லூரி அருகே அமைந்துள்ளது கிருஷ்ணா கால்வாய். ஊத்துக்கோட்டையில் இருந்து இவ்வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் சென்று சென்னை குடிநீருக்கு பெரிதும் உதவுகிறது.
இக் கால்வாயில் ஆறு போல் நீர் ஓடுவதால் இதனை சுற்றியுள்ள பகுதிகளும் அப் பகுதியை கடக்கும் பயணிகளும் நீரை கண்டதும் குளிக்கும் ஆசை உருவாகிறது.
இதுமட்டுமில்லாமல் விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்து வந்து நீரில் ஆபத்தை உணராமல் நீராடி வருகின்றனர்.
இங்கு பல நேரங்களில் மது பிரியர்கள் குழுவாக இணைந்து மது அருந்திவிட்டு குளிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
இதில் தனியாக வரும் நபர்கள் போதையில் குளிக்கும் போது தவறி விழுந்து உயிர் இழக்கும் நிலையும் உருவாகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் அதிக அளவில் மது அருந்திவிட்டு பூந்தமல்லி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஜினி என்பவர் குளிக்கும்போது முற்படும் போது மயங்கி நீரில் விழுந்து மூழ்கி பலியானார்.
இதுபோன்று நிகழ்வுகளைத் தவிர்க்க அப்பகுதியில் குளிக்க தடை என கூறி பதாகைகளை காவல்துறை வைக்க வேண்டும் எனவும் ,
எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu