தாம்பரம் அருகே பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

தாம்பரம் அருகே பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
X

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சச்சின்.

Police Arrest -தாம்பரம் அருகே பிரபல ரவுடி சச்சினை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

Police Arrest - காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையூர் பகுதியை சேர்ந்தவர் சச்சின்(28), பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சோமங்கலம் போலீசாரால் தேடப்பட்ட வந்த சச்சின் சாய்ராம் கல்லூரி சாலையில் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க முற்பட்டனர்.

அப்போது ரவுடி சச்சின் பாஸ்கர் என்ற காவலரை இடது தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். போலீசார் சரணடைய சொல்லியும் கேட்காமல் தாக்கி விட்டு தப்பிப்பதில் குறியாக இருந்தார். உடனடியாக தற்காப்பிற்காக ஆய்வாளர் சிவகுமார் 9எம்.எம். துப்பாக்கியால் முட்டிக்கு மேல் 3 முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் காலில் பட்டுள்ளது.

சச்சினுடம் வந்த பரத் என்ற நபர் தப்பியோடி விட்டார். சச்சினையும், காவலரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து ரவுடி சச்சினை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ரவுடி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தி, இரண்டு நாட்டு வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது