ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
X

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகங்கள் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளதால் அதிலிருந்து வெளியேறும் புகை மாசு ஏற்படுவது தவிர்க்க இப்படி வளாகங்களில் அதிகளவு மரக்கன்றுகளை நட்டு பசுஞ்சோலைகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில்ரூ13.50 கோடி மதிப்பீட்டில் 3,04,627 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொழிற்துறை அமைச்சர் .தங்கம் தென்னரசு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

உடன் தொழிற்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி , சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை , சி.வி.எம்.பி.எழிலரசன் , மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!