பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,  காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
X

 ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்க நிகழ்வில் தங்கள் கருத்தை பதிவு செய்யும் பொதுமக்கள்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் நிலையத்தின் முன்பு, பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து, பெட்ரோல் நிலையங்கள் முன்பு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில், பெட்ரோல்,டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் புறவழிச்சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தின் முன்பு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட எஸ்எசி எஸ்டி பிரிவு தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பக்கிரிசாமி, அம்மன்குமார், சரவணன், சுந்தர்ராஜன் ,வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கையெழுத்து இயக்கத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க வலியுறுத்தி கையொப்பம் இட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!