வாய்ப்புள்ள தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..

வாய்ப்புள்ள தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..
X
தமிழக தொழிற்சாலைகளில் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் அங்கு விரைவில் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரம் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு வந்த அமைச்சர் இரு தொழிற்சாலைகளின்‌ உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் தொழிற்சாலை பிரிதிநிதிகள் ஆகியோர் விளக்கி எடுத்துரைத்தனர்.

அதன்பின் செய்தியாளர் சந்திப்பில் , தற்போதைய தேவை சூழலில் இவ்விரு தொழிற்சாலைகளிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி சதவீதம் உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும்‌, இதேபோல் தமிழகத்தில் பெல் நிறுவனம்‌ மட்மில்லாமல் வாய்ப்புள்ள தொழிற்சாலைகளிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தமிழக‌அரசு தயாராக உள்ளதாகவும் , உயிரிழப்பை குறைக்க தமிழரசு பல்வேறு நடவடிக்களை‌ இக்காலகட்டத்தில் எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story