ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு
X

ஆக்கிரமிப்பு பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றிய வருவாய்த்துறையினர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

சென்னை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் திருப்பெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் பன்றி, ஆடு, கோழி பண்ணை நடத்தி வருகிறார்.

இவர், சர்வே எண்:367/3 ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து, புகாரின் பேரில் தண்டலம் குறு வட்டு வருவாய் ஆய்வாளர் விமல்ரோஸ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். உடன் கிராம் நிர்வாக அலுவலரும் சென்றிருந்தார்.

இந்நிலையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியான பின், வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு இடத்திலுள்ள வேலிகளை ஜேசிபி உதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர்.

Tags

Next Story