ஸ்ரீபெரும்புதூரில் 1500 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: ஆட்சியர் வழங்கல்

ஸ்ரீபெரும்புதூரில் 1500 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: ஆட்சியர் வழங்கல்
X

1,500 பெண்களுக்கு 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

ஸ்ரீபெரும்புதூர் மொபிஸ் நிறுவனம் சார்பில் 1500 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியர் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஆயகொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற தனியார் தொழிற்சாலை தொண்டு நிறுவனத்தின் சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில், மகப்பேறு நலத்திட்ட உதவியாக 1,500 பெண்களுக்கு 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

ஸ்ரீபெரும்புதூர் அங்கன்வாடி மையங்களின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் மற்றும் மொபிஸ் இந்தியா மற்றும் ஒளி இந்தியா என்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த நலத்திட்டங்களை அளித்துள்ளனர்.

தாய்மார்கள் மகப்பேறு காலங்களிலும் மகப்பேறு முடிந்த உடன் ஊட்டச்சத்துக்களை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் தாய்ப்பால் அளிப்பதின் அவசியம் குறித்தும் ஆட்சியர் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் சார்பாக சார்பாக திருமதி. சங்கீதா மற்றும் மொபிஸ் இந்தியா ஒளி இந்தியா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் ரியு ஜே இன், லக்ஷ்மன், சுப்பிரமணி, சரவணகுமார், வீரப்பன், ஜெகதீஷ், ஜானகிராமன் தினேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Tags

Next Story