வடமாநில வாலிபர் கொலை; ஸ்ரீபெரும்புதூரில் 5 பேர் கைது

வடமாநில வாலிபர் கொலை; ஸ்ரீபெரும்புதூரில் 5 பேர் கைது
X
வடமாநில வாலிபரை கொன்று புதைத்த விவகாரத்தில் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் இஸ்ரேல் சகா. இவர் நான்கு மாதத்திற்கு ஒரு முறை தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து மீண்டும் ஒடிசா சென்றுவிடுவார்.

ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் இஸ்ரேல் சகா வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவரது செல்போனை கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அவரது நண்பர் குரு தேவை சந்தித்ததாக தெரியவந்ததை தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இஸ்ரேல் சகலை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்து கிருஷ்ணா கால்வாய் அருகே புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை குற்றவாளி காண்பித்த இடத்தில் நேற்று தோண்டி அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அனுப்பி வைத்தனர். பெண்களை ஏமாற்றி இஸ்ரேல் சகால் பாலியல் தொழில் செய்யும் நபர்களிடம் விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, முதல் கட்ட விசாரணையில் அவரது நண்பர்களான ரஞ்சித் குமார், அஜித்குமார், ருக்மாங்கதன், குருதேவ் மற்றும் ஜெயகுமார் என ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி