வேட்பு மனு வாங்க கூட ஆள் வரலை..

வேட்பு மனு வாங்க கூட ஆள் வரலை..
X
வேட்பு மனுதாக்கல் செய்ய முதல் நாளான இன்று, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் யாரும் வரவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி.தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் 1,74,186 ஆண் வாக்காளர்களும் ,1,83,194 பெண் வாக்காளர்கள் மற்றும் இதரர் 53 பேர் என 3 லட்சத்து 57 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4747 வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள்.

இங்கு அதிமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பழனி போட்டியிடவுள்ளார்., திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஸ்ரீபெரும்புதூர் RDO அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் 11 மணிக்கு தொடங்கி 3 மணியளவில் முதல் நாள் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனு வாங்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புஷ்பராஜ் மட்டுமே வந்திருந்தார். சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் கூட வரவில்லை . இதுவரை 6 பேர் மட்டுமே வேட்பு மனு வாங்கி சென்றுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!