புதிய டாஸ்மாக் கடை மூடாவிட்டால் கடை முன் தீக்குளிப்பேன் பெண் ஆவேசம்

புதியதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும். பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் பகுதியில் புதியதாக அரசு மதுபானக்கடை 4007எண் கொண்ட கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கீரநல்லூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசு மதுபான கடையை மூடக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
சம்பவம் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கிராம பெண் கூறுகையில் , எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அவ்வழியாக செல்ல வேண்டிய நிர்பந்தமும் பணிக்கு செல்லும் பெண்களும் வீடு திரும்புகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும்,
தங்கள் கணவரின் குடும்ப வருமானம் அனைத்தும் மதுவிற்கு செலவானால் குடும்பத்தை எப்படி நடத்துவது எனவும் இங்கு கடை திறந்தால் கண்டிப்பாக தீ குளிக்க போவதாக கூறியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் இருப்பினும் அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளார்.
மேலும் காஞ்சிபுரத்திலும் இது போன்ற பல கடைகளில் பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தும் கடை திறக்கப்படுகிறது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu