வேன்கள் நேருக்குநேர் மோதி விபத்து 8 பேர் படுகாயம்

வேன்கள் நேருக்குநேர் மோதி விபத்து   8 பேர் படுகாயம்
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வேன்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம் கூட்டு சாலையில் மண்ணூர் வழியாக காஞ்சிபுரத்தை நோக்கி மார்பில் ஏற்றி வந்த வேனும் , வானகரத்தில் இருந்து மீன் ஏற்றிவந்த வாகனமும் மோதி இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்நிலையில் இவற்றிற்கு இடையில் இருசக்கர வாகனமும் சிக்கிக்கொண்டது.இந்த விபத்தில் வானகரத்தில் இருந்து மீன் ஏற்றிவந்த பெண்கள் உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர் கை கால் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!