பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..

பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..
X
பாதுகாப்பு கவச உடையணிந்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
ஒரகடம் அடுத்த எழுச்சூரில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கூப் செல்வபெருந்தகை பாதுகாப்பு கவச உடை அணிந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவம் முறைகள் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார் கேட்டறிந்தார்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது அலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரகடம் அருகிலுள்ள தொழிலாளர் நல வாரிய கட்டடத்தில் இயங்கி வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று மாலை இந்த சிறப்பு முகாமினை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை முகாமில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் உணவு வகைகள் ஆகியவற்றை அங்குள்ள மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அதன் பின் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!