ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு
ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவ்வப்போது அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் எவ்வித ஆரவாரமின்றி தனது காரில் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு , உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
மேலும் உள்நோயாளிகளாக தங்கி இருந்த நோயாளிகள் மருத்துவ வசதி முறையில் குறித்தும் , மருத்துவர்களின் மருத்துவ உபசரிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சரின் ஆய்வு அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தவிர எந்த ஒரு அரசு அதிகாரிகளுக்கும் தெரியாது.இது குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்துவிட்டு நோயாளிகளின் உடல் நலத்தில் கவனம் கொண்டு உரிய சிகிச்சை அளிக்க அறிவுரை வழங்கி சென்றுள்ளார்.
ஆய்வு என்ற பெயரில் ஒரு கூட்டத்தையே கூட்டிக்கொண்டு சுற்றி வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தனிநபராக அதிகாலை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது நோயாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அமைச்சர் ஆய்வின்போது புறநோயாளிகள் பிரிவில் உரிய மருத்துவர் இல்லாததால் அது குறித்து அவரிடம் விளக்கமளிக்க கேட்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu