கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் அமைச்சர் துவக்கி வைத்தார்

கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் அமைச்சர்  துவக்கி வைத்தார்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை அமைச்சர் அன்பரசன் தொடக்கிவைத்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

காஞ்சிபுரம் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மூன்றாவது கொரோனா அலையை தடுப்பு நடவடிக்கைகளால், தவிர்க்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார துவக்க விழாவை சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் ஊரக தொழிற்துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து டி.பி.சி. பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளையும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலை மற்றும் பண்பாட்டு துறையின் சார்பில் திரு.சிட்டுவின் அறிவொளி தீபம் கலைக்குழுவினரின் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் அமைச்சர் அவர்கள் கை கழுவும் முறை மற்றும் கைகளை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன எல்.ஈ.டி. வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்ட கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் .செல்வபெருந்தகை , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.எஸ்.எம்.திவாகர், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.அனுராதா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் .முத்து மாதவன், குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான், மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil