மணல் திருட்டு-அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் கைது

மணல் திருட்டு-அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர்  கைது
X

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பாப்பாங்குழி ஏரியில் சவுடு மண் திருடிய வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள் , ஏரிகள் ஆகியவற்றில் மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது . இந்நிலையில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பாப்பாகுழிப் பகுதியில் உள்ள தாங்கல் ஏரியில் இரவு நேரங்களில் சவுடு மண் திருடப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் போலீசார் அங்கு திடீர் ஆய்வு நடத்திய போது அப்பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை செயலாளர் விநாயகமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சசிகுமார் , பழனி ஆகியோர் சவுடு மண் திருட முற்பட்ட போது கையும் களவுமாக பிடிபட்டனர்.

ஏரி மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுங்குவார்சத்திரம் போலீசால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான ராஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story