போதைக்காக எலுமிச்சை சாறுடன் தின்னர் குடித்த ஒருவர் உயிரிழப்பு : 2 பேர் சுய நினைவிழப்பு
தின்னர் குடித்த ஒருவர் சுயநினைவிழந்த நிலையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழச்சாறு பிழிந்து தின்னர் ரசாயனத்தை குடித்து உள்ளனர்.
இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை காடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேசை காவல்துறையினர் தற்போது தேடி வருகிறார்கள். இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu