காஞ்சிபுரம்; மனுநீதி நாள் முகாமில் ரூ.4.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வட்டம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 305 பயனாளிகளுக்கு ரூ.4.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் , காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழங்கினார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம்; மனுநீதி நாள் முகாமில் ரூ.4.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வட்டம் பக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் மனுநீதினால் முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பரசன் உடன் கலெக்டர் ஆர்த்தி. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வட்டம்பாக்கம் கிராமத்தில் மக்கள் மனுநீதினால் முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. மனுநீதி நாள் முகாமில் 305 பயனாளிகளுக்கு ரூ.4,39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழங்கினா்.

விழாவில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், வட்டம்பாக்கம் கிராமத்தில், வருவாய்த்துறையின் சார்பில், ரூ.3.73 கோடி மதிப்பில், இலவச வீட்டுமனைப் பட்டா 196 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித் தொகை 33 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ரூ.1.32 லட்சம் மதிப்பில், பாரத சுகாதார இயக்கம் கழிப்பறை வசதி 11 பயனாளிகளுக்கும், ரூ.16.80 லட்சம் மதிப்பில், பிரதம மந்திரி, குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் 7 பயனாளிகளுக்கும், ரூ. 18.60 லட்சம் மதிப்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்கு வங்கிக் கடனும், மாவட்ட தொழில் துறை சார்பில், ரூ. 4.70 லட்சம் மதிப்பில், தொழில் வங்கிக் கடன் உதவி 5 பயனாளிகளுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், ரூ.24,000/- மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் 5 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத் துறையின் சார்பில், ரூ.3.64 லட்சம் மதிப்பில், பயிர்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மத்திய காலக்கடன் 6 பயனாளிகளுக்கும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பில், 10 பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளும், மொத்தம் 305 பயனாளிகளுக்கு, ரூ.4,39,85,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெறுகிற மனுக்களை, ஆய்வு செய்து முக்கிய பிரச்சனை விரைவில் தீர்க்கப்படக் கூடிய பிரச்னைகள். முக்கியத்துவம் தந்து மக்களுக்கும் உதவிடும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

இம்முகாம் அனைத்து மாவட்டங்களிலும், அதன் ஒன்றியங்களில் மாதத்திற்கு ஒரு முறை, மனுநீதி முகாம்கள் நடத்தி, இந்நிகழ்ச்சியில் பெறுகிற மனுக்களை, ஆய்வு செய்து, முக்கிய பிரச்சனை விரைவில் தீர்க்கப்படக் கூடிய பிரச்சனைகள். முக்கியத்துவம் தந்து மக்களுடைய பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய, வாழ்வு உயர வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்றார்.

இம்முகாமில் கலெக்டர் ஆர்த்தி திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2023 12:00 PM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...