வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு : காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழிலாளர் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தினர்
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை, நிர்வாகத்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களிடம் மூன்றாவது நாளாக எஸ்பி சுதாகர் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறை உட்கோட்ட காவல்துறை அலுவலர்கள் உடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரவுவதை தொடர்ந்து அதனை தடுக்கும் பொருட்டும்., வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வினோத் சாந்தாரம், காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் செயல்படுத்த வரும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் திருப்பெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பெரும்புதூரில் உள்ள Saint Gobain Company, Wheel India Limited Company வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள வடமாநில தொழிலாளர்களிடம் அச்சத்தை போக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பேசியதாவது: சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் முற்றிலும் பொய்யானவை என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் வடமாநில தொழிலாளர்கள் தங்குமிடங்களில் காவலர்கள் பகல் மற்றும் இரவு ரோந்து மேற்கொள்ளப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்படும்.
வடமாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கம்பெனிகளில் காவல்துறை உதவி எண்களை கொண்ட சுவரொட்டி/பிளக்ஸ் போர்டுகளை வைக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தொழிலாளர்கள் தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்த நிறுவனங்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது செல்போனில் காவலன் செயலி மூலம் தொடர்பு கொள்ளும்போது காவல்துறையினர் விரைந்து வந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்வார்கள் என வடமாநில தொழிலாளர்களுக்கு புரியும் வண்ணமாக இந்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் அவர்களிடம் தொழிற்சாலை சார்பில் ஏதேனும் அழுத்தம் உள்ளதா எனவும் அது குறித்து தங்களிடம் எப்போது வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் எண்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியும் தொழிலாளர்களின் சிலர் செல்போன்களில் பதிவு மேற்கொள்ளதை பார்வையிட்டும் அறிவுறுத்தினார்.
கடந்த மூன்று நாட்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் , சுங்குவார்சத்திரம் , இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கும் தொழிற்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் எஸ் பி மற்றும் காவல் துறை அலுவலர்கள் தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu