காஞ்சிபுரம்: ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைப்பு பணி துவக்கம்
வல்லம் - வடகால் பகுதிகளில் ஏரி புனரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.
காஞ்சிபுரம் மாவட்டம் ,திருப்பெரும்புதூர் ஒன்றியம், வல்லம் - வடகால் பகுதியில் உள்ள காரணிபேட்டை ஏரி மற்றும் பெரியதாங்கல் ஏரியை அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஏரி தூர் வாரி புரனமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது
இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் ரூ.16 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளால் ஏரிகள் தூர் வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு நீர்பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும்.
இதனால் நீர்த்தேக்கம் அதிகரிக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கத்திற்கு போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரபவானி மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu