கண்ணாடி தொழிற்சாலையின் புதிய பிரிவுகளால் 200 பேருக்கு வேலை வாய்ப்பு

கண்ணாடி தொழிற்சாலையின் புதிய பிரிவுகளால் 200 பேருக்கு வேலை வாய்ப்பு
X

மாம்பாக்கம் கண்ணாடி தொழிற்சாலையில் 3 புதிய பிரிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

மாம்பாக்கம் கண்ணாடி தொழிற்சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த 3 புதிய பிரிவுகளால் 200 பேருக்கு வேலைப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை 1998ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 2000ம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே 3 பிரிவுகள் உள்ளன. இதில் கூடுதலாக புதியதாக 500 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பிரிவுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சாலை மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கண்ணாடி தொழிற்சாலை உலகின் முதலாவது மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது. இதில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் கொண்டது. 75 நாடுகளில் உள்ள செயின்ட் கோபின் தொழிற்சாலையில் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் தமிழக சிறு குறு தொழில் அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு, கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, தொழிற்சாலையின் தலைமை செயல் அதிகாரி பெனோயிட் பாஸின், பி.சந்தானம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!