விரைவில் நகை கடன் தள்ளுபடி நகைகள் வழங்கப்படும் :அமைச்சர் ஐ.பெரியசாமி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கூட்டுறவு வார விழா
அறுபத்தி எட்டாவது அனைத்திந்திய கூட்டுறவு மாநில அளவிலான வார விழா கரசங்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குனர் மாதவன் வரவேற்புரை நிகழ்த்த கூட்டுறவு உறுதி மொழியினை காஞ்சி மண்டல இணைப்பதிவாளர் வாசிக்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி மொழி ஏற்றனர்
விழாவில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.
விழாவில் பேருரை ஆற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி , இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற மகளிர் சுய உதவி குழு கடன் , விவசாயக் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த 5 சவரன் நகை கடன் தள்ளுபடி குறித்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் , விரைவில் எவ்வித முறைகேடும் இன்றி அவர்களுக்கு வீடு தேடி பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி செல்வம் , தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu