ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர் கைது
கைது செய்யப்பட்ட மனோகரன்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம்கண்டிகை பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக இடைத் தரகராக இருந்து வந்துள்ளார்.
நேற்று அலுவலகத்தின் உள்ளே நுழைந்து வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளர் அருள்மொழி என்பவரிடம் சென்று தகாத வார்த்தையில் பேசி அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
மேலும் அலுவலகத்தில் உள்ள பெண் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களிடமும் தனக்கு வேண்டியவர்களின் போக்குவரத்து அலுவலகம் சம்மந்தப்பட்ட வேலையை முடித்து தருமாறு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய போலிசார் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியது உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்ததுடன் தரகர் மனோகரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் தரகரை நம்பாதீர்கள் நேரடியாக அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுங்கள் என பதாகை வைத்திருந்தாலும் அவசர உலகத்தில் இருக்கும் மக்கள் இது போன்ற தரகரை தான் நாடுகின்றனர்.
அரசு அலுவலர்களும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பயந்து இதுபோன்ற இடைத்தரகர்களை பயன்படுத்தியதால் இதுபோன்ற அவமானங்கள் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுவதாகும், 12 ஆண்டுகளாக கோலோச்சி வந்த இந்த இடைத் தரகர் கைதுக்கு பின் அரசு ஊழியர்கள் திருந்துவார்களா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu