ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி மில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி ஏற்படுத்தப்படுமா ?
ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தனி வழி இல்லாததால் நெரிசலில் சிக்கி தடுமாறும் ஆம்புலன்ஸ்.
திருப்பெரும்புதூர் சுங்கச்சாவடியில் எப்போதும் வாகன நெரிசல் ஏற்படும் நிலையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழி இல்லாததால் நோயாளிகள் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கைஎழுந்துள்ளது.
கோயில் நகரம் மட்டும் இல்லாது தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் , இருங்காட்டு கோட்டை ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றி செல்ல போக்குவரத்து வாகனங்களும் தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளும் குத்தகைக்கு எடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சாலைக்கு வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வெறும் போக்குவரத்து நெரிசல் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படுகிறது.
மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து நாள்தோறும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல இந்த வழியை தான் பயன்படுத்துகின்றனர்.தற்போது வாகனம் நிலை பெருகி உள்ள இந்நிலையில் நாள் ஒன்றுக்கு கார் வேன் பஸ் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 2000 வாகனங்கள் சுங்கச்சாவடி கடந்து செல்கின்றன.
சென்னை TO பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளும் அதிகமாக நடக்கின்றன. வாகன நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் 10 நிமிடம் காத்திருக்க வேண்டி உள்ளது.விபத்திற்கு உள்ளானவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வருகிறது என்றால் வாகன நெரிசலில் இருந்து ஆம்புலன்ஸை காப்பாற்ற யார் வருவார் என்ற நிலை உள்ளது .
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழித்தடம் இருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழித்தடம் இல்லை.தொடக்கத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக சுங்கச்சாவடியின் வலது புறமும் இடது புறமும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழித்தடம் இருந்தது. இப்போது ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வழித்தடங்களில் கான்கிரீட் கற்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆம்புலன்ஸ் செல்ல வழியின்றி ஆம்புலன்ஸ் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே திருப்பெரும்புதூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழித்தடம் அமைத்து தர வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu